எக்லெஸ் ட்ரஃபில் கேக் ரெசிபி (Egg less Truffle Cake)


ரெசிபி பரிமாற 04 நிமிடங்கள்
தயார் செய்யும் நேரம் 05 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்1 மணிநேரம்
மொத்த சமையல் நேரம்1 மணிநேரம் 05 நிமிடங்கள்

முட்டை சேர்க்கப்படாத சாக்லேட் ட்ரஃபில் கேக் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
எக்லெஸ் ட்ரஃபில் கேக் சமைக்க தேவையான பொருட்கள்
ஸ்பான்ச் தயாரிக்க:

  • 150 மில்லி லிட்டர் எண்ணெய்
  • 275 கிராம் சர்க்கரை
  • 185 கிராம் மில்க் மெய்டு
  • 375 கிராம் தயிர்
  • 375 மைதா
  • 9 கிராம் பேக்கிங் சோடா
  • 9 கிராம் பேக்கிங் பவுடர்

சுகர் ஸிரப் தயாரிக்க:

  • 200 கிராம் சர்க்கரை
  • 200 மில்லி லிட்டர் தண்ணீர்
  • ட்ரஃபில் தயாரிக்க:
  • 500 கிராம் டார்க் சாக்லேட்
  • 250 கிராம் ஃப்ரஷ் க்ரீம்

எக்லெஸ் ட்ரஃபில் கேக் எப்படி செய்வது
ஸ்பான்ச் தயாரிக்க:
ஒரு பௌலில் எண்ணெய் தவிர்த்து எல்லா பொருட்களையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கடைசியாக எண்ணெய் சேர்த்து கொள்ளவும்.
கேக் மோல்டில் இந்த கலவையை ஊற்றி 180 டிகிரியில் 35 முதல் 40 நிமிடங்கள் வரை வைத்து எடுக்கவும்.
ட்ரஃபில் தயாரிக்க:
ஒரு பௌலில் டார்க் சாக்லேட்டை வெட்டி போடவும்.
ஒரு சாஸ்பேனில் க்ரீமை கொதிக்கவிட்டு சாக்லேட்டில் ஊற்றவும். இரண்டையும் நன்கு கலந்து கொள்ளவும்.
பின் ஆற வைக்கவும்.
சுகர் ஸிரப் தயாரிக்க:
சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி தனியே எடுத்து வைக்கவும்.
சாக்லேட் ட்ரஃபில் கேக் தயாரிக்க:
ஸ்பான்ச் கேக்கை மூன்று அடுக்காக வெட்டி கொள்ளவும்.
ஒரு அடுக்கை கேக் போர்டில் வைத்து, சுகர் ஸிரப் தடவ வேண்டும். பின் ட்ரஃபில் தடவவும். அடுத்தடுத்த அடுக்குகளுக்கு இதே போல செய்ய வேண்டும்.
இறுதியாக ட்ரஃபிலை உருக்கி கேக் மீது ஊற்றவும். பின் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து பரிமாறவும்.

Comments