ரெசிபி பரிமாற தயார் செய்யும் நேரம் 20நிமிடங்கள்
சமைக்கும் நேரம் 20 நிமிடங்கள்
மொத்த சமையல் நேரம் 40நிமிடங்கள்
எவ்வளவு கடினம் நடுத்தரமாகபிறந்தநாள் மற்றும் திருமண கொண்டாட்டங்களுக்கு கேக் சாப்பிட்டுவந்த நாம் தற்போது எல்லாவற்றிற்கும் கேக் வெட்டி கொண்டாட ஆரம்பித்துவிட்டோம். முட்டை மற்றும் செயற்கை ஃப்ளேவர் சேர்க்கப்படாத இந்த வென்னிலா கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
எக்லெஸ் வென்னிலா கேக் சமைக்க தேவையான பொருட்கள்
- 1 கப் மைதா
- 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
- 1/4 கப் கேஸ்டர் சுகர்
- 1/4 கப் வெண்ணெய்
- 1 கப் பால்
- 1 தேக்கரண்டி வென்னிலா எசன்ஸ்
- 1 தேக்கரண்டி வினிகர்
எக்லெஸ் வென்னிலா கேக் எப்படி செய்வது
மைதா மற்றும் பேக்கிங் பவுடரை நன்கு சலித்து வைத்து கொள்ளவும்.
மற்றொரு பௌலில் வெண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.இரண்டையும் நன்கு கலந்து கொள்ளவும். அதில் மைதாவை சேர்த்து கலந்து கொள்ளவும். அரை கப் பால் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும். மேலும் அதில் வென்னிலா எசன்ஸ் சேர்க்கவும்.
மேலும் அரை கப் பால் சேர்த்து ஹேண்ட் பீட்டர் வைத்து அடித்து கொள்ளவும்.
அதில் சிறிதளவு வினிகர் சேர்த்து கொள்ளவும்.
கலந்து வைத்த கலவையை ஒரு மோல்டில் ஊற்றி மைக்ரோவேவ் அவனில் 180 டிகிரியில் 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து எடுக்கவும்.
பின் இதனை சிறு துண்டுகளாக வெட்டி பரிமாறலாம்.
Comments
Post a Comment